மின் கம்பத்தில் தலை மோதி ரயிலில் பயணித்த முஸ்லிம் இளைஞர் பலி

திருகோணமலை யிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் தலை மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இப்பரிதாபச் சம்பவம் நேற்று முன்தினம் (2012.12.10) திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் குருணாகலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

கிண்ணியா மாலிந்துரை பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் முகம்மது பதகிர் (வயது 18) எனும் இளைஞரே பலியானவராவார். இவர் கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை தேடிச் சென்று கொண்டிருக்கையில் இப்பரிதாபச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப் படுகின்றது. இவரது ஜனாஸா உறவினர்களிடம் கையளிப்பதற்காக குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment