விளையாட்டில் காத்திருக்கும் ஆபத்துக்கள்…

rio660_2872323[1]-MJ

விளையாட்டுக்கள் என்னதான் போட்டியாக ஆரம்பித்தாலும் முடிவில் நட்புடன் முடிவடைவதே விளையாட்டுக்கான ஓர் கௌரவமாக அமையும்.

இருந்தாலும் அதிகமான போட்டிகள் நட்பிலேயே முடிவடைகின்றன. இருந்தும் சில போட்டிகள் ஆபத்துக்களில் முடிவடைகின்றமை கவலை தரும் விடயமாக இருந்து வருகின்றது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் உதைப்பந்தாட்ட ஆட்டமானது, இங்கிலாந்து மக்களை மாத்திரமல்ல உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களையும் ஈர்க்கின்ற ஓர் தொடராக அமையும்.

இருபது சிரேஷ்ட அணிகள் பங்குபற்றும் இத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 38 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணிக்கும் இரு போட்டிகள் இடம்பெறும். அவற்றுள் ஒரு போட்டி சொந்த மைதானத்திலும் (Home), மற்றைய போட்டி எதிர்தரப்பு மைதானத்திலும் (Away) இடம்பெறும்.

முடிவில் 38 போட்டிகளில் எந்த அணி கூடுதலான புள்ளிகளைப் பெறுகின்றதோ, அவ் அணி குறித்த காலத்துக்கான (Season) சம்பியனாக முடிசூடும்.

Rio+Ferdinand-600x399[1]நேற்று ஞாயிறு பி.ப  மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் மன்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி, சிட்டி மைதானத்தில் இடம்பெற்றது. இடைவேளை வரை 2:0 எனும் ரீதியில் யுனைட்டட் முதன்மை வகித்திருந்தது.

இடைவேளைக்குப் பின்னராக ஆட்டத்தில் 2 கோல்களை சிட்டி இட்டு போட்டியைச் சமன் செய்திருந்தது. எனினும் 90 நிமிடங்கள் முடிந்து, மேலதிகமாக வழங்கப்பட்ட 4 நிமிட ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் ‘பிரி கிக்’ உதை மூலமான சிறந்த கோலை மன்செஸ்டர் அணியின் வீரர் வென் பேர்ஸி பெற்றுக் கொடுத்து, எதிரணியின் மைதானத்தில் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் 3:2  கோல் அடிப்படையில் மன்செஸ்டர் யுனைட்டட் இப்போட்டியில் வெற்றி பெற்றது.

சொந்த மைதானத்தில் தோல்வியைத் தாங்க முடியாத மன்செஸ்டர் சிட்டி அணியின் இரசிகர் ஒருவர் இறுதி நேரத்தில் மைதானத்துக்குள் நுழைந்து, மன்செஸ்டர் அணியின் வீரர் ரியோ பெர்டிணாந் மீது ‘குத்தி’ (Coin) நாணயத்தால் முகத்தில் எறிந்து காயப்படுத்தினார்.

இருந்தும் தாக்குதல் நடத்திய இரசிகரை மன்செஸ்டர் சிட்டடி கோல்காப்பாளர் நையப்புடைத்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டது மாத்திரமல்லாமல், போட்டிக்கு மதிப்பளித்து ஓர் முன்மாதிரியை தனது அணி இரசிகர்களுக்கும் காண்பித்தார்.

_64661916_64661682[1]இவ்விரு அணிகளும் மன்செஸ்டர் நகரில் இரு துருவங்களாக இருக்கும் எதிரி அணிகளாகும். பிரிமியர் லீக் வரலாற்றில் மன்செஸ்டர் யுனைட்டட் 19 தடவைகளும், மன்செஸ்டர் சிட்டி 2 தடவைகளும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ன.

இவ்வாறிருக்க, கடந்த மாதம் சிம்பாவேயில் 34 வயதான ஐசாக் மபோனா எனும் மத்தியஸ்தர் இரசிகர்களால் கொல்லப்பட்டார்.

stapff-andres-reuters.n[1]இம்மாதம் 4ம் திகதி ஹோலந்து மத்தியஸ்தர் ஒருவர் ஆத்திரமடைந்த குறித்த அணி வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போன்று போட்டிகள் ஆரம்பமானது முதல் இன்றுவரைக்கும் வீரர்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் உலகில் அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் இருந்துவருவது கவலைக்குரிய விடயமாகும்.

Published by

Leave a comment