மறைந்த மூத்த ஊடகவியலாளா் சகோதரா் ஏ.எல்.பழுலுல்லாஹ் அவா்களின் மறைவையொட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனுதாப நிகழ்வொன்று இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடியின் ஊடகவியலாளர்கள் மற்றும் காத்தான்குடி பஸ் டிப்போ உத்தியோகத்தா்கள், மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.பழுலுல்லாஹ் பற்றிய மிகச் சிறப்பான உரை ஒன்றினை காத்தான்குடி ஊடகவியலாளர்கள் சார்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் அல்.ஹாஜ். MSM. நுார்தீன் JP அவா்கள் நிகழ்த்தினார்.




Leave a comment