டீன் பைரூஸ்.
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த 08.12.2012 சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் ஜனாப்.SL. அப்துல் கபூர் (B.com, Dip in Edu,HRD(ind) அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சா் கௌரவ தாஜூல் மில்லத் அல்.ஹாஜ்.MLAM.ஹிஸ்புல்லாஹ் MA/MP, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் அல்.ஹாஜ். சிப்லி பாறுக் (Eng) அவா்களும் அழைக்கப் பட்டிருந்தனா்.
கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக ஜனாப் SMM.அமீா்(SLES), Mr.S.சிறிதரன்(SLES), அல்.ஹாஜ்.MSM.சுபைா் (BA.Dip in Edu) ஜனாப்.DL. அப்துல் முபாறக் (BA/PGDEM.M.PGDE, அல்.ஹாஜ்.SHM.அஸ்பா் JP, அல்.ஹாஜ்.KLM.பரீட் JP உட்பட மேலும் பல அதிதிகள், பாடசாலைகளின் அதிபா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பொற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
இந்நிகழ்வில் பாடசாலையினுடைய மாணவா்களின் பல் வேறு பட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், இறுதியாக பரிசளிப்பு வைபவம் இடம் பெற்றது.
படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.











Leave a comment