புதிய காத்தான்குடி மட்/அல்.அமீன் வித்தியாலயத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை கொள்முதல் செய்வதற்காக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்.ஹாஜ்.ULNM. முபீன் BA/JP அவா்கள் சுமார் 50,000/= ரூபாய் அன்பளிப்பு செய்ததன் மூலமும் அப்பாடசாலையின் ஆசிரியா்கள் குழாமின் அளப்பெரிய பங்களிப்புடனும் போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு பாடடசாலை மண்டபத்தினில் அதிபர் M.M. கலாவுதீன் SLPS/JP தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அல்.ஹாஜ் MSM.சுபைர் BA/DEO KKY , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் அல்.ஹாஜ்.KLM. பரீட் JP, நகர சபை உறுப்பினா் அல்.ஹாஜ்.HMM. பாக்கீர்.BA/JP உட்பட ஆசிரியா்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக் செய்யவும்’









Leave a comment