அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தகவல் வழங்கிய தாதி மர்ம மரணம்!
-MJ
இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேய்ட் வில்லியம்ஸ் ஓர் குழந்தைக்கு தாயாகின்றார்.
ஏப்ரல் 29, 2011 அன்று இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேய்ட் மிடில்டன் ஆகியோருக்கிடையிலான திருமணம் உலகமறிய நடந்தேறியது.
லண்டன் ‘கிங் எட்வார்ட் VII’ உயர் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த கேய்ட், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை வெளியாகினார்.
கேய்ட் கற்பமான செய்திகள் அறிந்து அரச மாளிகைகளிலும், இங்கிலாந்து முழுவதிலும் மகிழ்ச்சி ஆரவாரங்களும், வாழ்த்துக்களும், பொம்மைகளும் மற்றும் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.
மிக இரகசியமாக குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேய்ட் வில்லியம்ஸ் பற்றிய செய்திகள் அறிந்து, அதனை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய DJs எனும் செய்தி ஊடகம் ‘ தாங்கள் அரச குடும்பத்திலிருந்து பேசுகிறோம்’ என்ற ஏமாற்று வார்த்தையை உபயோகித்து, கேய்ட்டிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொண்டது.
குறித்த தொலைபேசி அழைப்பைப் பெற்ற திருமதி ஜஸின்தா சல்தனா எனும் தாதி தற்பொழுது மர்ம நிலையில் மரணமாகியுள்ளது இங்கிலாந்திலும் அரச குடும்பத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இங்கிலாந்து நேரப்படி காலை 05:30 மணிக்கு குறித்த தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந் நேரத்தில் வரபேற்பாளர் (Receptionist) யாரும் அங்கிருக்கவில்லை.
எனினும் தகவல் வழங்கியதற்காக குறித்த தாதிக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கைகளோ, வேலை நிறுத்தமோ அல்லது அழுத்தங்களோ கொடுக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இம்மரணம் மேலும் பல சந்தேகங்களைத் தோற்று வித்திருக்கின்றது.
ஜஸின்தா, கேய்ட்டின் தனிப்பட்ட தாதியாக செயற்பட்டு வந்தவர். தன்னால் அரச குடும்பத்திற்கே ஓர் தவறை செய்துவிட்டேன் என மனமுடைந்து தான் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
பரிசோதனை மேற்கொள்ளும் பொலிசார்
இரண்டு பிள்ளைகளின் தாயான ஜஸின்தா சல்தனா மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் மருத்துவமனை விடுதியில் வசித்து வந்தார். அவரது இல்லத்தில் அவரது சடலத்தை பொலிசார் இன்று மாலை கண்டெடுத்தனர். மேலதிக விசாரணைகள் துருவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
![saldanha-police-4_3_r560[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/saldanha-police-4_3_r5601.jpg?w=530&h=399)
Leave a comment