சிறுவர் துஷ்பிரயோகம் வீடுகளிலேயே அதிகமாக ஆரம்பிக் கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமா, அண்ணன்மார், ஏன் தந்தையரே தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவே, வீடுகளி லேயே இந்தப் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெ ன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிக ரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாட்டின் அடி ப்படையில் கல்வி அமைச்சு சர்வதேச பாடசாலைகளில் உள்ளக விவகாரங்களை உன்னிப்புடன் அவதானித்து அவசியமாயின் அங்கு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச பாடசாலைகளின் நிர்வாகத்தின் கவனயீனமும், அசட்டையான போக்குமே இந்த சர்வதேச பாடசாலை மாணவ, மாணவரிடையே பாலியல் ரீதியிலான ஒழுக்கம் குறைவடைவதற்கான காரணம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாத்திரம் எல்லாமாக 42 சர்வதேச பாடசாலைகள் இருக் கின்றன. இவற்றில் கல்வி எந்தளவுக்கு நல்ல முறையில் கற்பிக்கப் பட்டாலும், இந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் குறை ந்திருப்பது வேதனையை அளிக்கிறது. இவற்றை விட கொழும்புக்கு வெளியில் நாட்டின் நாலா பக்கங்களிலும் 37 சர்வதேச பாடசாலை கள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைகள் அப்பாவி பெற்றோரிடம் இருந்து நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான ரூபா நோட்டுகளை அற விடுகின்றன.
1980ம் ஆண்டு தசாப்தத்தில் இருந்து சர்வதேச பாடசாலைகளை நிர் வகிப்பதற்கான அரச சட்ட திட்டங்கள் எதுவும் அமுலாக்கப்பட வில்லை. முதலீட்டு சபையின் கீழ் வருவதனால் கல்வி அமைச்சு இந்த பாடசாலையின் செயற்பாடுகளில் தலையீடு செய்ய விரும்புவ தில்லை.
பண வசதியுடைய எவரும் அரசாங்கத்திடமோ, கல்வி அமைச்சிடமோ எவ்வித அனுமதியும் பெறாமல் நாட்டில் சகல இடங்களிலும் சர்வ தேச பாடசாலைகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கின்றது. இத னால் தான் சர்வதேச பாடசாலைகளின் தரம் குறைந்திருப்பதுடன் அவ ற்றின் ஒழுக்கமும் சீர்குலைந்துள்ளது. இன்று ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்து பரீட்சைகளில் சித்தியடையாமல் இருந்தாலும் அவர் களின் தராதரம் பாராமல் சர்வதேச பாடசாலைகளில் ஆசிரியர்க ளாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
சர்வதேச பாடசாலைகளில் மாணவர்களும், மாணவியரும் மிகவும் நெரு ங்கிப் பழகுவதனால் அவர்களுக்கிடையில் காதல் தொடர்புகள் ஏற் பட்டு அவை அப்பாடசாலையின் கழிவறைகளில் பாலியல் துன் புறுத்தல்களாக மேடையேறுவதும் உண்டு. இதுபற்றி தகவல் தெரி வித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சர்வதேச பாடசா லைகளில் ஒழுக்கம் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாணவ, மாண வியர் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்புவதனால் பல அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்று கூறினார்.
இந்த நிலைமையை சீர்படுத்தி சர்வதேச பாடசாலைகளில் ஒழுக்கமும் தார்மீக உணர்வுகளும் வலுவடைய வேண்டுமாயின் இப்பாடசாலைக ளில் மத போதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மத போதனை க்கு ஒதுக்க வேண்டுமென்று கூறினார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் முழுக் கவனத்தை செலு த்த வேண்டுமென்றும் பாடசாலை முடிவடைந்த பின்னர் விளையா ட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத பிள்ளைகளை உடனடியாக பெற்றோர் அல்லது அவர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்களை அனுப்பி வைப்பதற்கும் சர்வதேச பாடசாலைகளின் நிர்வாகங்கள் பொறுப்பாக இருந்து செயற்பட வேண்டும்.
சர்வதேச பாடசாலைகளில் இன்று நிலவும் ஒழுக்கக் கேடுகளை நிவர் த்தி செய்து, அவற்றை நாட்டின் கலை, இலக்கிய, பாரம்பரியங்களு க்கு ஏற்புடைய நல்ல பாடசாலைகளாக மாற்றுவது அவசியம். இல் லையேல் என்றோ ஒருநாள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களோ, கல்விகற்க முடியாது போன மாணவர்களோ எதிர் ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவற்றை இலங்கையில் செயல் இழக்கச் செய்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முன்னாள் அரசாங்கங்கள் தங்கள் ஆதரவாளர்கள் இத்தகைய பாரதூர மான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவற்றை மூடி மறைத்துவிடு வதுண்டு. ஆனால், இந்த அரசாங்கம் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறு ப்பினர்களோ, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களோ இத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பொலிஸ்கா ரரை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தால் அதனால் மேலும் பாரதூர மான விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி அவர்கள் ஒரு தடவை கூறிய நகைச்சுவையான கதையை இவ்விடத்தில் கூறுவது பொருத்தமானதாக இருக்கும். ‘மகளுக்கு முதலில் குத்திவிட்டு, பின்னர் தாயையும் குத்தியிருக்கிறது என்று ஒருவர் புகார் செய்த போது, அந்த பாதகன் யார் என்று கேட்ட போது அது டெங்கு நோயை பரப்பும் நுளம்பு என்று பதில் வந்தது’ என்று ஜனாதிபதி சொன்னார்.
-தினகரன்
Leave a comment