ஊடகவியலாளர்கள் என்பவர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவா்கள். மூத்த ஊடகவியலாளர் எம்மைவிட்டு மறைந்த சகோதரா் மர்ஹூம் ALM. பழுலுல்லாவின் மறைவையொட்டி அன்னார் பற்றிய நினைவு கூறும் வைபவம் ஒன்றினை மிகக் குறுகிய காலத்தினுல் ஏற்பாடு செய்தமைக்கு ஊடக உலகிக்கு சிறந்த முன்மாதிரியாக காத்தான்குடி மீடியா போரம் இருப்பதாக புத்தி ஜீவிகள், உலமாக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கடந்த 07.12.2012 வெள்ளிக்கழமை காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலய கோட்போர் கூடத்தில் இடம் பேற்ற இந்நிகழ்வுக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் கௌரவ செயலாளர் மௌலவி அல்.ஹாஜ்.SMM.முஸ்தபா(பலாஹி) JP தலைமை தாங்கினார்கள். மௌலவி,MAM. மஸ்ஊத் அஹமத்(ஹாஷிமி) அவா்களின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வுக்கு ஊள்ளுா்,வெளியூர் ஊடகவியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மூத்த ஊடகவியாலர்களான M.I. றஹ்மதுல்லாஹ், A.H.A.ஹூசைன் ஆகியோர் உரையாற்ற, MSM. மஜீட், MIM.முஸ்தபா ஆகியோர் கவி பாடினர். சகோதரா் ALM.பழுலுல்லாவின் மறைவையொட்டிய விசேட உரையினை காத்தான்குடி கவிமணி அல்.ஹாஜ் MHM.புஹாரி(பலாஹி) BA நிகழ்த்தினார்கள்.
இறுதியாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா், சிரேஷ்டஊடகவியாளர் அல்.ஹாஜ் MSM.நுார்தீன் JP அவா்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 








Leave a comment