சட்டம் சகலருக்கும் சமனானது! ஜனாதிபதி தெரிவிப்பு

Kottawa_joining_the_Southern_Highway[1]‘நான் பழிவாங்கும் மனிதர் அல்ல. உயர்மட்டத்தில் இருந்தால் என்ன கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன சட்டம் சகலருக்கும் சமனானது. யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும் ‘என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 southern_ew1[1]தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன வெளியேறும் நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பு சுற்றுவட்டப்பாதை கொட்டாவையினூடாக கொரவலப்பிட்டிய வரை மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘கெனோன்வின் ஆர்கோட்” (Canonwin Arcode) என்ற உணவகம் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உணவகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒருவரின் ஊழல் மோசடிக்குறித்து எதிர்க்கட்சி அன்று கோஷம் எழுப்பியது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓடியது. அவரின் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது.

இன்று சட்டத்திற்கு அமைய,அரசியலமைப்பிற்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைசாய்க்காது.

சட்டத்திற்கு அமைவாக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுமார் 400 கோடி ரூபா செலவில் சகல வசதிகளுடன் ஆறு நுழைவாயில்களை உள்ளடக்கியதாக முற்றிலும் நவீன முறையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

கொட்டாவையிலிருந்து காலிக்கு செல்லும் வரையிலான அதிவேகப்பாதையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரேயொரு உணவகம் இதுவாகும்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment