கடற்கரைக்குச் சென்று விளையாடி விட்டு எந்த அச்சமுமின்றி கடலில் குளிக்கச் சென்று மரணமாகும் சிறுவா்களின் வீதம் இலங்கையைப் பொருத்த மட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த அப்பாவி சிறுவா்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு தாரி என்ற கேள்விக்கு விடை காணமுடியாத சூழ் நிலையில் மரண வீதமும் அதிகரித்த வண்ணமே உள்ளது என தற்போதைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கத் தெரியாத இந்த இளம் சிறார்கள் தனது பொற்றோர்களிடம் பாடசாலைக்கு அல்லது பிரத்தியோக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி விட்டே கடற்கரைக்குச் செல்கின்றனா்.
வேறு சிலா் தனது நன்பர்களின் வலுக்கட்டாயமான அழைப்பின் பேரில் கடற்கரைக்குச் செல்கின்றனா். அவ்வாறு செல்கின்றவா்களில் அதிகமான சிறுவா்கள் கடலில் கூட்டாகக் குளிப்பதனையே விரும்பி குளிக்கின்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது யாருக்காவது ஆபத்து வந்து விட்டால் அவரை காப்பாற்றத் தெரியாமல் அப்படியே விட்டு ஓடி விடுகின்றனா்.
எது எப்படி இருந்த போதிலும் இவ்வாறான மரணத்திற்கு யார் பொறுப்பு தாரிகள் என்ற கேள்விக்கு விடைகான முடியாத நிலையில் சிறார்களின் மரண வீதமும் அதிகரித்த வண்ணமுள்ளன.

Leave a comment