சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு நடாத்திய மாபெரும் கருத்தரங்கு!

– எமது நிருபர்

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், ‘பரீட்சை நுட்பங்களும் திறன் அபிவிருத்தியும்’

எனும் தலைப்பில் 3 மணி நேர கருத்தரங்கு ஒன்றினை 05/12/2012 அன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களிற்கும், ஏனைய மாணவ, மாணவிகளிற்கும் இத்துறையில் விஷேட நிபுனத்துவம் பெற்ற வளவாளர் MLM. மக்ஷுத் அவர்கள் கொழும்பில் இருந்து இங்கு வந்து பல பயனுள்ள விடயங்களை மாணவ, மாணவியர்களிற்கு  பரீட்சைக்கு பயமில்லாமல் தோற்றுவது சம்பந்தமான விடயங்களையும் வழங்கி, மிகசிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் சுமார் 600 இற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டதுடன் வளவாளர் MLM.. மக்ஷுத் அவர்களும் BCAS நிறுவனத்தின் விரிவுரையாளர் ALM. சபீல்(நளிமி) அவர்களும் சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM. ஹாரிஸ்(JP) அவர்களும் கலந்து கொண்டார்கள்.

படங்களின் மேல் ‘கிளிக்’ செய்யவும்.

Published by

Leave a comment