அதிசயமிக்க நுளம்பு பற்றிய தகவல்

nulampu

ஈயைப் போன்றே நுளம்புக்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வெளிக் கிளம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. 

உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வெவ்வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப் பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.

சில வகை நுளம்புகள் மனிதனின் தோலின் மீது அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சுவதற்கேற்ப அந்தத் தோலின் நிறத்திற்குத் தன்னை மாற்றி யாரும் பார்க்காத வண்ணம் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சுமார் 60 மீட்டர்களுக்கு அப்பாலிருந்தே மனிதனின் இரத்த வாடையை நுகரும் ஆற்றல்மிகு உணர்ச்சிக் கொம்பையும் அல்லாஹ் இவற்றுக்குக் கொடுத்துள்ளான்.

அல்லாஹ் இணை வைப்பாளர்களுக்கு உதாரணமாக 22:73இல் ஈயைப் பற்றியும் 29:41இல் சிலந்தி வலையைப் பற்றியும் கூறி வசனங்களை இறக்கியதும் இதனைச் செவியுற்ற இணைவைப்பாளர்கள் அல்குர்ஆனைக் கேலி செய்யும் விதமாக “உங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் ஈயைப் பற்றி, சிலந்தியைப் பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளனவா?” என்று வினவினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி வைத்தான்.

“நிச்சயமாக அல்லாஹ் நுளம்பையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்பட மாட்டான்.”

உண்மை, சத்தியம் என்பன எவ்வளவு அற்பமானதாகத் தோன்றினாலும் அதனைக் கூறுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். இவ்வசனத்தில் ……. என்ற சொல் நுளம்பைக் குறிக்கின்றது.

நுளம்பு ஈயை விடவும் சிறியதோர் உயிரினம். நுளம்பை மாத்திரமல்ல ……. என்ற சொற்களின் மூலம் அதனை விடவும் அற்பமான ஒன்றையும் அல்லாஹ் உதாரணமாகக் கூற வெட்கப்பட மாட்டான் என்கிறது இவ்வசனம்.

இது தவிர மற்றுமொரு கருத்தும் இதற்கு உண்டு. இப்பொருள் குறிக்கும் விடயம் இன்றுதான் நவீன விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈயல்ல, நுளம்பல்ல நுளம்பின் மீதுள்ளது. (…… என்றால் ஒன்றின் மேல் என்றும் பொருள்படுகிறது.) அதனை விடவும் அற்பமான உயிராக இருந்தாலும் அதனைப் பற்றிக் கூறவும் நான் வெட்கப்பட மாட்டேன் என்று நுளம்பின் தலையின் மேல் இருக்கும் ஓர் அற்பக் கிருமியின் உண்மைத் தன்மையைப் பற்றி எந்தவித நுணுக்குக் காட்டியும் இல்லாத அந்த நாளில் திருமறை கூறியிருக்கின்றது.

இங்கு படம் A முகத்தோற்றத்தையும் படம் B அதன் நுண்ணிய கண்களையும் படம் C அக்கண்களை இன்னும் பெரிதுபடுத்தியும் படம் D அக் கண்களுக்கிடையில் இருக்கும் அல்குர்ஆன் கூறும் அற்புத உயிரினத்தையும் காட்டுகின்றது.

இவ்வுயிரினத்திற்கு விஞ்ஞானம் ‘ப்ளாஸ் மோடிம்’ (Plasmodiam) என்று பெயரிட்டுள்ளது. 1898ஆம் ஆண்டு ரொனால்ட் ரொஸ் என்வர் தான் கியூலெக்ஸ் (Culex) நுளம்புகளில் ‘ப்ளாஸ் மோடியம்’ உள்ளதைக் கண்டுபிடித்தார். இதற்காக அவருக்கு 1902ல் நோபிள் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் ரொனால்ட் ரொஸ் கண்டு பிடிப்பதற்கு முன்னர் அல்குர்ஆன் இவ்வறிவியல் அற்புதத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தும் அது பற்றி சிந்திக்க ஒரு முஸ்லிம் விஞ்ஞானி கூட இருக்கவில்லையே என்று கவலை தான் வருகின்றது.

‘ப்ளாஸ்மோடியம்’ எனும் இந்நுண் கிருமிகளை எமது வெற்றுக் கண்களால் காண முடியாது. இவ்வகை உயிரிகள் நுளம்புகளின் உடலில் ஒட்டிக் கொண்டு பிற உயிர்களைத் தாக்குகின்றன. எமது உடலில் நுழைந்து இவை செய்யும் செயற்பாடுகள் மிகப் பயங்கரமானவை. நுளம்புகள் எம்மைக் குத்துகையில் அவற்றின் உடலில் இருக்கும் இந்நுண் உயிர்கள் மனித உடலில் நுழைந்து செங்குருதிச் சிறு தட்டுக்களில் ஊடுருவி அவற்றில் தங்கி விடுகின்றன. பின்னர் அங்கு இனப்பெருக்க செய்துவிட்டு குருதி வழியாகச் சென்று கல்லீரலைத் தாக்குகின்றன. இதனால் பல நோய்களுக்கும் மனிதன் ஆளாகின்றான். இந்தவகை நுண் கிருமிகளால்தான் மலேரியா நோய் பரவுகின்றது.

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் சான்றுகள், அத்தாட்சிகளை எமக்குப் புலப்படுத்துவனவாகவே இருக்கின்றன. அது பற்றி சற்றுச் சிந்தித்தாலே பல நூறு அற்புதங்கள் எமது சிந்தையில் படும்.

“(நபியே!) அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்.” (38:29)

நன்றி: அகரம் பாத்திமா றுகையா

Published by

Leave a comment