ஹாபிழ்கள் கௌரவிப்பு

டீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினரால் நடாத்தப்பட்டு வரும் அல்-குா்ஆன் மனனப் பிரிவில் குறுகிய காலத்தினுள் கூடிய ஜுஸ்களை மனனம் செய்து முடித்த மாணவா்களுக்கும் ஏனைய மாணவா்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்வு (03.12.2012 திங்கட்கிழமை) பள்ளிவாயலில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு விசேட பேச்சாளராக அஷ்செய்ஹ்-எம்.றிஸ்வான்(மதனி)BA கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“ என்னதான் உலகக் கல்வியைக் கற்றாலும் மாணவா்களைப் பொருத்த மட்டில் அல்-குா்ஆன் கல்வியைக் கற்பதே உயா்ந்ததாகும். மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இஸ்லாமிய வரலாற்றில் இப்னு அப்பாஸ் (றலி) அவா்கள்  10 வது வயதில் அல்-குர்ஆனை மனனம் செய்து காட்டிய வரலாறு எமக்கு நல்ல உதாரனமாகும் ‘ என்று கூறினார்.

மேற்படி நிகழ்வுக்கு பல உலமாக்களும், ஜமாஅத்தார்களும் கலந்துகொண்டனர். அல்-குர்ஆன் மனனப் பிரிவில் திறமையைக் காட்டிய மாணவன் எம்.எப்.எம்.றிழா என்பவருக்கு விருது வழங்கப்பட்டது.DSC00065DSC00083DSC00073DSC00058DSC00059

Published by

Leave a comment