யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

121204105143_jaffna_political_party1_304x171_bbc_nocredit[1]யாழ் பல்கலைக்கழ மாணர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், பல்கலைக்கழக சூழலில் இருந்து பாதுகாப்புப் படையினரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் தமிழ் அரிசியல் கட்சிகள் ஏனைய பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து யாழ் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

121204105320_jaffna_political_protest2_304x171_bbc_nocredit[1]மாணவர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், ஊடக சுதந்திரம் காக்கப்பட வேண்டும், செய்தியாளர்கள் தாக்கப்படக் கூடாது ஆகிய கோஷங்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினார்கள்.

அங்கு பேசிய தலைவர்கள் இராணுவம் பல்கலைக்கழக சூழலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்காக 4 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றில் பொதுமக்க்ளிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

-BBC/Tamil

Published by

Leave a comment