துபாயில் இடம்பெற்ற இலங்கையர்களை வேலைக்கமர்த்தும் செயலமர்வு

-ACM. சப்ரி

துபாயில் உள்ள இலங்கை தூதுவராலயம் கடந்த 26-11-2012 இல் துபாயில் உள்ள வேலை வாய்ப்பு முகவர்களுக்கும், இலங்கையர்களை வேலைக்கமர்த்தும் கொம்பனிகளுக்கும் ஓர் செயலமர்வை துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தது.

.
இந்தச் செயலமர்வில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர்களை இணையத்தளங்கள் ஊடாக எவ்வாறு வேலைக்கமர்த்துவது பற்றியும் தொழிலாளர்கள் தகுதிகள், மற்றும் நலன்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் எம்.எம். ரஹீம் தொடக்கவுரையை ஆரம்பித்து வைத்தார்.  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் இங்கு உரை நிகழ்த்தினர்.

இச்செயலமர்வுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள கொம்பனிகளின் சுமார் 80 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment