-MJ
காத்தான்குடி 5, ஊர்வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த, காத்தான்குடி இலங்கை போக்குவரத்துசபை முகாமையாளரும் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவருமான ஜனாப் ஏ.எல். பலுழுல்லாஹ் அவர்கள் சற்று முன்னர் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன்.
சுமார் 1980 களில் இருந்து தினகரன் பத்திரிகைக்கு எமது பிரதேச தகவல்களை உடனுக்குடன் வழங்கி வந்தார். அவர் மரணிக்கும்வரை இலங்கையின் தேசிய பத்திரிகையான தினகரனின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பத்திரிகையாளராகவும் பங்காற்றினார். அப்போதைய பிரதியமைச்சராக இருந்த மறைந்த டொக்டர் அகமட் பரீட் MP. அவர்களின் மெய்ப்பாதுகாவலராகவும் இருந்தார் .
அன்னாரது சுமார் 30 வருட ஊடகத்துறையின் பங்களிப்பு அவருக்கே நிகரானது.
அல்லாஹ் அவரது சமூக அக்கறைய ஏற்று பாவமன்னிப்பை வழங்கி அன்னாருக்கு சுவர்க்கத்தை வழங்க எமது இணையத்தளம் சார்பாக பிராத்திக்கின்றோம்.
அவரது பிரிவால் துயரடையும் அன்னாரது குடும்பத்தாருடன் உங்கள் காத்தான்குடி உம் அதன் வாசகர்களும் பங்கெடுக்கின்றனர்.
Leave a comment