சந்திர கிரகணத் தொழுகை தொடர்பாக இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.

முழு சந்திர கிரகணம் இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை 51 நிமிடங்கள் முழுமையாக இலங்கையில் தென்படவுள்ளது.

மேற்படி நேரத்தைக் கருத்திற் கொண்டு ஸுன்னத்தான இத் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் நபியவர்களின் தூய ஸுன்னாவின் அடிப்படையில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கிரகணம் ஏற்பட ஆரம்பித்தவுடன் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வில் சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்வதுடன் , நபியவர்களின் காலத்தில் பெண்களும் இத்தொழுகையில் கலந்து கொண்டுள்ளதால் முடியுமான பெண்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்

நிருவாகம்
இஸ்லாமிக் சென்றர்
காத்தான்குடி.

Published by

Leave a comment