இரகசியமாக மூன்றாவது திருமணம் செய்த கிறிக்கட் புகழும், MPயுமான சனத்!

உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.

இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று காலை மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றது.

விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.

மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார்.

-JVP

Published by

Leave a comment