தொலைபேசி ஊடாக பெரும் பணமோசடி

வாகனங்களை பரிசாக வென்று ள்ளதாக கூறி மக்களை தொலைபேசி மற்றும் குறுஞ் செய்திகள் (SMS) மூலம் ஏமாற்றி பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேக நபர்களை சிலாபம் பொலிஸார் மடக்கிப்பிடித்து ள்ளனர்.

இலங்கை பிரஜை ஒருவரும், நைஜீரிய பிரஜை ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

பல தரப்பட்ட கடவுச்சீட்டுகள், 2450 அமெரிக்க டொலர்கள், 70 ஆயிரம் ரூபா இலங்கை பணம், நான்கு கையடக்க தொலைபேசிகள், இரண்டு வங்கிப் புத்தகங்கள் மற்றும் வங்கி அட்டைகளை சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொண்ட விசாரணைகளின் போது நாட்டின் பல பாகங்களிலுள்ள மக்களுக்கு தாங்கள் வாகனம் ஒன்றை வென்றுள்Zர்கள் என்று தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ். கள் மூலம் தொடர்பு கொண்டு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளன.

மோசடியில் சிக்கியவர்கள் மற்றும் மோசடி செய்து பெற்றுக்கொண்ட பணங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில் சிலாபம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

–தினகரன்

Published by

Leave a comment