கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து .மூன்று சடலங்கள் சற்று நேரத்திற்கு முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் இரண்டரை வயதான ஆண் பிள்ளையொன்றின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணங்களுக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னரே இந்த மரணங்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உறவினர் ஒருவர் குறித்த மரணங்கள் இடம்பெற்ற வீட்டிற்கு சென்றிருந்த போதே சடலங்கள் இருப்பது குறித்து பொலிஸாரிடம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் இன்று மாலை மீட்கப்பட்ட மூன்று சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
38 வயதான சிவலிங்கம் ஸ்ரீகாந்தன் என்ற குடும்பஸ்தர், அவரது மனைவி 24 வயதான கோகிலவாணி மற்றும் அவர்களின் மகனான 2 வயது ஸ்ரீகாந்தன் சர்வேஸ் ஆகியோரின் சடலங்களே இலக்கம் 87 கிராண்ட்பாஸ் வீதி கொழும்பு-14 என்ற இடத்தில் உள்ள வீட்டில் இருந்து இன்று மாலை 6.10 அளவில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் தலவாக்கலை நகரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மரணங்கள் தற்கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-Tamilwin
Leave a comment