பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ: குறைந்தது 120 பேர் பலி!

-MJ

பங்களாதேஷின் தலை நகரான டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் ஆகக் குறைந்தது 120 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். கட்டடம் முற்றாக எரிந்து சாம்பலாகியிருக்கின்றது.

ஒன்பது மாடிகளைக் கொண்ட ‘தஸ்ரீன் பெஷன்’ எனும் பிரபலமான ஆடை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையிலேய இவ்விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

‘தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இன்று காலையில் ஏராளமான கருகிய உடல்கள் ஒவ்வொரு மாடிகளிலும் அங்குமிங்குமாகக் காணக்கூடியதாக இருந்தது’ என பிரிகேடியர் ஜெனரல் அபு நயீம் முகம்மட் ஸஹீதுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.

மின்னொளுக்கு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அவசர வெளியேற்ற வாயில்கள் போதியளவு இல்லாமையினாலும், பாதுகாப்பு வசதிகள் குறைவினாலும் ஊழியர்கள் தப்பிக்க முடியாமல் பொறியில் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. அவசர மீட்புப்படையினர் துரித பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான பிரபல ஆடைத் தொழிற்சாலைகள் பங்களாதேஷில் 4500 வரை உள்ளன.  இரண்டு மில்லியன் மக்கள் இதனால் வேலை வாய்ப்புக்களைப் பெற்று இருக்கின்றனர். பங்களாதேஷின் மொத்த உற்பத்தியில் ஆடை உற்பத்திகள் 80% செல்வாக்குச் செலுத்துகின்றன. மொத்த உற்பத்தியில் 24 பில்லியன் டொலர்கள் வருடம்தோரும் ஆடை ஏற்றுமதி மூலமாகக் கிடைக்கின்றன.

இவவ்hறான ஓர் ஆடைத் தொழிற்சாலை தீ விபத்து டிசம்பர் 2010ல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக 25 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment