இங்கிலாந்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை அங்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஒருவாரமாக நிலவும் மழையுடன்கூடிய மோசமான காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றன.
நேற்றிரவு பலத்த காற்று வீசியதால் மரம் சாயந்து வீழ்ந்ததில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டதுடன் இருவர் காயப்பட்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் 200 வெள்ள அபாய எச்சரிக்கைகளும், இங்கிலாந்து-வேல்ஸ் ஆகிய இடங்களில் 250 வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருப்பதாக பிரித்தாணிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாயத்தை அடுத்து கொர்ன்வேல் பகுதியில் 400 பேர்கள் தற்காலிக இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக கோர்ண்வேல் கவுன்ஸில் தெரிவித்திருக்கின்றது.
நேற்றிரவு சில வீதிகள் போக்குவரத்துக்காகக் தடை செய்யப்பட்தாகவும் முக்கிய நெடுஞ்சாலை சந்திகள் குறிப்பிட்ட நேரம் மூடப்பட்டதாகவும் பிரித்தாணிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![DAB5C9C875D8B59E1D1C817327929[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/dab5c9c875d8b59e1d1c8173279291.jpg?w=530&h=261)
Leave a comment