‘திரீல்’ அமைப்பின் தேடலுக்கான விருது

-டீன் பைரூஸ்

மக்களுக்காக பணி செய்வது என்பது மிகப் பெரிய பாக்கியம் .இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவ்வாறு மக்களுக்காக மகத்தான  பணி செய்பவா்களை சமூகம் சார்பாக பாராட்டுவது,கொளரவப் படுத்துவது என்பது மிக அவசியமான விடயமாகும். இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் திரீல் அமைப்பின் தேடலுக்கான விருது வடக்கு,கிழக்கு பகுதிகளில் பல்வெறு சமூகப்பணிகளில் ஈடு படுபவர்களை இனம் கண்டு அவர்களுக்கான சமூக சேவை விருது அன்மையில் வழங்கப்பட்டது.அந்த வகையில் காத்தான்குடியில் பல்வேறு சமூகப்பணிகளை கால,நேரம் பாராது பணி  செய்துவரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கொளரவ அல்.ஹாஜ்.கே.எல்.எம்.பரீட் JP அவர்களுக்கு வழங்கப்பட்டது. கொழும்பில் நடை பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ அமைச்சா் அல்.ஹாஜ். ஏ.எச்.எம்.பௌசி அவா்களும் முன்னால் பிரதியமைச்சா் நிஸாமுதீன், (ஏ.சீ.எம்.சீ), அல்.ஹாஜ்.எம். ஹமீட் மற்றும் ஆஸாத்சாலி உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து கொன்டு சிறப்பித்தனா்.

Published by

Leave a comment