அரபுலகத்திற்கு ஓர் முன்மாதிரி கெய்ரோ: தனது அயராத முயற்சியால் இஸ்ரேல்-பலஸ்தீன் சமாதான உடன்படிக்கை!

-MJ

இம்மாதம் (நவம்பர்) 14ம் திகதியிலிருந்து ஆரம்பமான இஸ்ரேல்-காஸா விற்கிடையிலான போர் தற்காலிகமாக ஓர் சமாதான பேச்சுவார்த்தைக்கு எட்டியிருக்கின்றது.

சுமார் ஒருவாரமாக இடம்பெற்ற உக்கிர மோதலில் இஸ்ரேலின் வான்,கடல் மற்றும் தரை தாக்குதல்களால் காஸா நகரம் இரத்தக் களமாகக் காட்சியளித்தது.

ஒருவாரமாக இடம்பெற்ற இச்சமரில் இரு தரப்புக்களும் தலா 1500 ரொக்கட்டடுக்களை ஏவி பலபப்பரீட்சையில் ஈடுபட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக 161 பலஸ்தீன் மக்களும், 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் முக்கியமான  ஹமாஸ் தலைவர்களும் உள்ளடங்குவதோடு, பெண்களும், சிறுவர்களும் பரிதாபமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.

1500 ரொக்கட்டுக்களை இஸ்ரேல் காசா மீது தொடுத்தாலும் இஸ்ரேலின் வான் மூலமான பல்லாயிரக்கணக்கான ரவைகளில் பொதுமக்களின் உடல்கள் சல்லடையாகின. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பலஸ்தீன் பொதுமக்களும், சிறுவர்களும் அங்கவீனர்களாக காஸா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இரு பகுதிகளின் எல்லைகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்குண்டு அச்சத்திலிருந்தனர்.

இதேவேளை இரு தரப்புக்குமிடையிலான சமர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேல் பொதுமக்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை எகிப்து கண்டித்திருந்தது.

எகிப்தின் புதிய ஜனாதிபதி அகமட் முர்சியின் அயராத உழைப்பினால் ஓர் சமாதான உடன்படிக்கைக்கு இரு தரப்புக்களும் முன்வந்திருக்கின்றன.

பணப்பலத்துடன் இருக்கும் அரபு நாடுகள் இன்னும் அமெரிக்காவின் அடிமைகள் என்பதை நிரூபித்துவரும் இந்நிலையில், அரபுலகத்தின் ஓர் புதிய ஜனாதிபதியின் இம்முயற்சியை உலகம் பாராட்டி இருக்கின்றது.

யுத்த நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காஸாவிலும், இஸ்ரேல் நகரங்களிலும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மரண பீதியில் இருந்த சிறுவர்களின் முகங்களில் மகிழ்ச்யைக் காணமுடிந்தது.

இரு தரப்புக்குமிடையிலான யுத்தமும், அதன் பின்னரான யுத்த நிறுத்தமும் இது முதற்தடவையல்ல! 2008ம் ஆண்டு இதே மாதிரியான ஓர் யுத்தம் இடம்பெற்று, அதன் பின்னர் யுத்த நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment