– CMM. அமானி.
2012/11/20
அன்புடையீர்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
பலஸ்தீன் மக்களின் நலனுக்காக பிரார்த்தித்தல்
2012/11/20 திகதிய ஜம்இய்யாவின் விசேட செயற்குழுக்கூட்ட தீர்மானத்திற்கமைய,
01. சகல பள்ளிவாயல்களுக்கும் பாலஸ்தீன் மக்களின் நலனுக்காக பிரார்த்தித்தல் தொடர்பாக கீழ்வரும் கடிதம் அனுப்பப்பட்டது.
02. எதிர்வரும் 23ஃ11ஃ2012 ஜும்ஆப் பிரசங்கம் பலஸ்தீன் மக்களின் நிலை தொடர்பிலும் முஸ்லீம் சமூகத்தின் கடமைகளும் என்ற தலைப்பின் கீழ் குத்பா பிரசங்கம் அமைய வேண்டுமென்று கதீப்மார்களுக்கு அறிவுறுத்துவது என்றும்.
03. எதிர்வரும் 24-25ஃ11ஃ2012 திகதிகளில் ஆசுறாஇ தாஸுஆ சுன்னத்தான நோன்புகளை அனைவரும் நோற்று பலஸ்தீன் மக்களின் நலனுக்காக பெண்கள் அனைத்து சகோதரர்களும் தமது பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொள்ளுமாறு மக்களை விழிப்பூட்டுமாரும் தீர்மானிக்கப்பட்டது.
2012/11/2012
சகல பள்ளிவாயல்களுக்கும்
காத்தான்குடி.
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
பலஸ்தீன் மக்களின் நலனுக்காக பிரார்த்தித்தல்.
2012ஃ11ஃ20 திகதிய ஜம்இய்யாவின் விசேட செயற்குழுக்கூட்ட தீர்மானத்திற்கமைய,
இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் மக்களின் நலனுக்காக இன்ஷாஅல்லாஹ் நாளை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு (21/11/2012 – 28/11/2012 வரை ) ஐவேளைத் தொழுகையில் குனூத் (குனூத் நவாஸில்) ஓதிப் பிரார்த்தனை செய்யுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
தலைவர்,
செயலாளர்,
ஜம்இய்யதுல் உலமா,
காத்தான்குடி.
Leave a comment