டெல் அவிவ் பஸ் குண்டுத்தாக்குதல்: 10 பேர் காயம்

-MJ

காஸா உதைப்பந்தாட்ட அரங்கை இஸ்ரேல் தாக்கிய பின்னர், இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் இல் பஸ் ஒன்றில் குண்டு வெடித்திருக்கின்றது.

இக்குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கின்றது.

‘இது பயங்கராவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்’ என்பதாக இஸ்ரேல் இராணுவப்பேச்சாளர் கூறியிருக்கின்றார்.

இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இஸ்ரேலின் இராணுவத் தலைமைக் கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்றதால் டெல்அவிவ் தற்பொழுது பதட்டமடைந்திருப்பதுடன் மேலதிக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Published by

Leave a comment