-MJ
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உக்கிரமான மோதலில் 20 பலஸ்தீனர்களும் இரண்டு இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
ஒரு வாரமாக இடம்பெறும் இச்சமரில் இதுவரை 136 பலஸ்தீனர்களும், 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா. செயலாளர் பான்-கீ-மூன், அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் உட்பட எகிப்திய பிரதமர் அகமட் முர்சியும் இணைந்து இருதரப்பு யுத்த நிறுத்தத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களை உலக நாடுகள் பகிரங்கமாக கண்டித்தும் அமெரிக்காவும், ஐ.நா. வும் இவ்விடயத்தை கண்டுகொள்ளாமல் கடந்த 5 நாட்கள் கழிந்து சென்றன.
எனினும் உலக முன்னணி ஊடகங்களில் தினமும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளைக் கோடிட்டு, புகைப்படங்களுடன் பிரிசுரித்து வருவதால், இனிமேலும் மௌனம் காக்க முடியாதென்று, ஓர் புற முதுகுப் பேச்சுவார்த்தையை இஸ்ரேலைப் பகைத்துக் கொள்ளாமல், உலகின் முன் சமாதானம் செய்ய முன்வந்திருக்கின்றன.
எப்படியிருப்பினும், தினமும் அநியாயமாகக் கொல்லப்படும் பலஸ்தீன் அப்பாவிச் சிறுவர்களையாவது இந்த யுத்த நிறுத்த முன்னேற்பாடு முயற்சியால் காக்க முடியும் என்ற நம்பிக்கையில் கெய்ரோ தொடர்ந்தும் முயற்சிக்கிறது.
Leave a comment