நேற்று திங்கட்கிழமை வரையான 6 நாட்களாகத் தொடரும் இஸ்ரேலின் ரொக்கட் வீச்சுக்களுக்கு இதுவரை 105 பலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சுமார் 200 பேர் படுகாயமடைந்து, உடலுறுப்புக்கள் இழக்கப்பட்டு, மரணத்தறுவாயிலும், அங்கவீனர்களாகவும் காஸா மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தினமும் அதிகாலை வேலை இஸ்ரேலிருந்து அனுப்பப்படும் நூற்றுக்கணக்கான ரொக்கட்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீது வந்து வீழ்ந்து வெடிக்கின்றன. இதன் காரணமாக மனித உயிர்கள் சிதறி துடிதுடித்து எரிகாயங்களால் சுட்டெரித்து வீதிகளில் சடலங்களாய் வீசியெறியப்படுகின்றன.
நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 100க்கும் மேற்பட்ட ரொக்கட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருக்கின்றது.
‘நாங்கள் தொடர்ந்து ஹமாஸ் போராளிகளைக் குறிவைப்போம். இவ்வாறு குறிவைத்து அழித்தால்தான் இஸ்ரேலை ரொக்கட்டுகளிலிருந்து காப்பாற்ற முடியும்’ என்பதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கின்றார்.
இதற்கிடையில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் கெய்ரோவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார். இருநாட்களுக்குள் இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாஹூவையும், பலஸ்தீன் பிரதமர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
எகிப்தின் பிரதமர் அகமட் முர்சி விடுத்த அழைப்புக்கு அமெரிக்காவின் மறைமுக காலணித்துவ நாடுகளாக இருக்கும் பிரபல்ய அரபு நாடுகள் செவிசாய்க்காமல் நழுவிச் சென்றுவிட்டன.
ரஷ்யாவின் ஐ.நா. தூதுவர் விடாலி சுர்கின் உடனடியாக இருநாடுகளிலும் சமாதானம் ஏற்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்.
![_64245209_64245208[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/64245209_642452081.jpg?w=530&h=288)
Leave a comment