சுமார் இற்றைக்கு 1442 ஆண்டுகளுக்கு முன், கி.பி. 571ம் ஆண்டு, அல்லாஹ்வின் ஆலயமான கஃபதுல்லாஹ்வை தகர்த்தழிக்க அபிஸீனிய ( எதியோப்பியா) மண்ணன் ஆபரகாமும் அவனது கூட்டத்தாரும் மக்காவுக்குள் வருகின்ற வழியில் வைத்து ‘அபாபீல்’ எனும் பறவைகளின் மூலமாக ‘சிஜ்ஜீல்’ எனும் சிறுகற்களை அனுப்பி, ஆப்ரஹாமின் யானைப்படையை அழித்த சரித்திரம் அல்குர்ஆனிலும் (சூறா: அல்-பீல்) ஹதீஸ்களிலும் கூறப்பட்ட விடயமாகும்.
அபாபீல் பறவைகள் மூலமாக அனுப்பப்பட்ட இத்தகைய ‘சிஜ்ஜீல்’ கற்களில் ஒன்றை சவூதி அரேபியர் ஒருவர் ‘பஹா’ எனும் பகுதி, ‘அல்-அகீக்’ மாநிலத்தில் உள்ள ‘ஜரப்’ பள்ளத்தாக்கில் கண்டெடுத்திருக்கின்றார். ; ஆப்ரஹாவும் அவனது கூட்டத்தாரும் தங்கியிருந்த பள்ளத்தாக்கு இதுவாகும்
131 கிராம் எடைகொண்ட இக்கல் களிமண் படிந்த சுட்டெரிக்கப்பட்ட கல் போன்று காணப்படுகிறது. இக்கல்லை தற்காலிக ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள், நிச்சயமாக இக்கல் 1000 வருடங்களைத் தாண்டிய பழமையுடையது என தெரிவித்திருந்தாலும், சவுதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
இக்கல் எகிப்து நாட்டவரால் 4 மில்லியன் டொலருக்கு விலை கோரப்பட்டது. எனினும் குறித்த நபர் இக்கல்லை விற்பதற்கு விரும்பவில்லை.
![sijil[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/sijil1.jpg?w=288&h=208)
Leave a comment