ஓர் வீட்டின் மீதான இஸ்ரேலின் வெறித்தாக்குதல்: ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஸ்தலத்தில் பரிதாபகமாக உயிரிழப்பு!

ஐரோப்பாவில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள்!

(படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்)

-MJ

நேற்று ஞாயிற்றுக்கிழமை காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்த வான் தாக்குதலில் 26 பேர்கள் நேற்று மாத்திரம் கொல்லப்பட்டனர். இவர்களுள் 14 பெண்கள் உட்பட சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த புதன்கிழமையிலிருந்து நேற்று ஞாயிறு வரைக்கும் 70 பொதுமக்களும் 3 ஹமாஸ் தளபதிகளும் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 250 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

நேற்று காஸாவில் ஓர் குறித வீட்டின்மீது இடம்பெற்ற இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் துடிதுடித்து உயிரிழந்திருக்கின்றனர். அவ்வீட்டில் ஒன்பது பேர்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும் இஸ்ரேல் கூறி இருக்கின்றது.

இதற்கிடையில் ‘ஒபரேசன்’ தொடர்ந்து இடம்பெறும் எனவும், அதனை விரிவாக்கத்துடன் மேற்கொள்ளுமாறும் தங்களது படைகளுக்கு இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெடன்யாகு உத்தரவிட்டிருக்கின்றார்.

இவ்வாறான ஒரு மிலேச்சத்தனமான பலஸ்தீன் மக்கள் மீதான தாக்குதல் 2009 ஆரம்பப் பகுதியில் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவும், ஐ.நாடுகளும் வாய்மூடி இருந்தன.

ஐரோப்பா முஸ்லிம்களின் புரட்சிகரமான ஆர்ப்பாட்டத்தின் அழுத்தத்தின் காரணமாக பேச்சுவார்த்தை இன்றி இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி பின்வாங்கி இருந்தது.

தற்பொழுது ஐரோப்பா அச்சு ஊடகங்களும இலத்திரனியல் ஊடகங்களும் மனித நேயத்துடன் செய்திகளை உடனுக்குடன் இஸ்ரேலின் நரபலிகளையும் கொல்லப்பட்ட பலஸ்தீன் சிறுவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இதன்காரணமாக ஐரோப்பா மக்கள் கொதித்தெழுந்தாலும், அங்குள்ள  அரசுகள் வாய் மூடிக் கொள்கின்றன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பாவில் மேற்கொள்ளக்கூடும் என வலுவான எதிர்பார்ப்புக்களும் இருக்கின்றன.

Published by

Leave a comment