ஜனாதிபதியின் 67 வது பிறந்த தினத்தில் 67 மரங்கள்.

டீன் பைரூஸ்.

இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது பிறந்த தினம் இன்றாகும்.( 18 நவம்பா்) அன்னாரின் பிறந்த தினமான இன்று இலங்கையின் பல பாகங்களிலும் பல சமய அனுஷ்டானங்கள் மற்றும் மர நடுகை போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. ஓட்டமாவடி ,ஏறாவுர், காத்தான்குடியிலுள்ள  சில பள்ளிவாயல்களில் துஆப்பிரார்த்தனைகளும் இடம் பெற்றன. காத்தான்குடி நகர சபையிலும் உயரமான 04 மரங்கள் நடப்பட்டன.

இன்று பி்ப. 04.00 மணிக்கு இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பொறியலாளர் சிப்லி பாறுக், நகர முதல்வா் எஸ்.எச்.எம்.அஸ்பா், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எம்.லெத்தீப் (அலிசப்ரி) உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

ஜனாதிபதியின் ‘மக்கள் பணி’ தொடர  எமது இனையத்தள இதயங்களுடன் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published by

Leave a comment