2013ஆம் ஆண்டின் பாடப்புத்தகங்களுக்காக அரசாங்கத்துக்கு 2400மில்.ரூ.செலவு

41 லட்சம் மாணவர்களுக்கு 06 ஆம் திகதி விநியோகம்!

2013 ஆம் ஆண்டின் பாடப் புத்தகங்களுக்காக அரசாங்கம் 2400 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன தெரிவித்தார்.

இம்முறை 37 மில்லியன் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 404 புதிய புத்தகங்களும் அச்சிடப் பட்டன.

41 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் உத்யோகபூர்வ நிகழ்வு டிசம்பர் 06 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரியில் நடைபெறும்.

437 வகையான புத்தகங்கள் 2013 இல் விநியோகிக்கப்படும். 23 வகையான நூல்கள் ஏற்கனவே அச்சாகியுள்ளன என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

41 லட்ச மாணவர்களுக்காக 370 லட்சம் புத்தகங்களை விநியோகிக்க வேண்டியுள்ளது. சகல மாணவர்களுக்கும் புதிய புத்தகம் ஒன்றை வழங்குவது அரசின் கொள்கை என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment