காஸா ஏவுகணை தாக்குதலை முறியடிக்க 75,000 இஸ்ரேலிய படையினர் குவிப்பு!

-MJ

இஸ்ரேல்-காஸா விற்கிடையிலான சமர் மீண்டும் உக்கிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் இலும் புராதண நகரான ஜெரூஸலத்திலும் சுமார் 75,000 படையினரை இஸ்ரேல் விசேடமாக நிறுத்தி இருக்கின்றது.

கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சமரில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் 7 சிறுவர்களும் இரு காஸா படைத்தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.

இதனால் காஸாவில் இருந்து பதிலடி வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இரு பகுதி எல்லைகளில் பதட்டம் நிலவுகின்றன.

இதுவரை ஏவப்பட்ட கஸ்ஸாம் ரொக்கட்டுகள் சுமார் 75 மீற்றர் இலக்குள்ளவை என்பதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் உறுதிசெய்திருக்கின்றனர். கஸ்ஸாம் ரொக்கட்டுகள் ஈராணின் பஜ்ர்-5 ரகத்தையுடையது என மேலும் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்.

டெல் அவிவ் 1991 வளைகுடா யுத்தத்தின் பின்னர் முதற்தடவையாக தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment