இலட்சிய சமூக உருவாக்கத்தில்…..

டீன் பைரூஸ்.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின்  ஏற்பாட்டில் ஆண்கள்,பெண்களுக்கான ஆன்மீக அறிவுட்டல் நிகழ்ச்சி (17.11.2012 சனிக்கிழமை) இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மஸ்ஜிதில் இடம் பெற்றது. தர்பிய்யத் என்னும் ஆன்மீகப் பக்குவப்படுத்தல் தொடர்பான உருக்கமான உரைகளை நிகழ்த்தி அல்லாஹ்வின் நெருக்கத்தின் பால் மக்களை அழைத்து வருபவரும், சமகால முஸ்லிம் உலகின் நிலவரங்கள் மற்றும் முஸ்லிம் உலகத்தின் பின்னடைவுகள் தொடா்பாகவும் கருத்தாடல்கள் மேற்கொன்டு   இஸ்லாமிய எழூச்சியின் உண்மை  நிலவரங்களை  தெளிவுபடுத்தி வருபவரும், இஸ்லாமிய குடும்பவியல், ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நாடலகரீதியில் நடாத்துவதில் அனுபவ புலமையும் மிக்கவருமான திஹாரியில் அமைந்துள்ள “ இலங்கை அல்பாதிஹ் கல்வி நிறுவனப் பணிப்பாளர் ” அஷ்ஷெய்க் AM.அக்றம் (நளீமி) BA  அவா்கள் நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய வீடு பண்பியல்புகளும் வரையறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கும்.

இலட்சிய சமூக உருவாக்கத்தில் – வீடு – பாடசாலை – பள்ளிவாயல்  எனும் தலைப்பில் ஆண்களுக்கும் இடம் பெற்றது.

மேற்படி  தர்பிய்யத் எனும் ஆன்மீகப் பக்குவப்படுத்தல் தொடர்பான உருக்கமான உரைகளை கேட்பதற்காக பல சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Published by

Leave a comment