இன்று வெள்ளிக்கிழமை பலஸ்தீன் காஸாவிலிருந்து ஏவப்பட்ட கஸ்ஸாம் ஏவுகணை இஸ்ரேல் ‘குஷ் ஏசியொன்’ எனும் அரபுக் குடியிருப்புக்கருகில் விழுந்தது.
ஏவுகணை அனுப்பப்பட்டதும் அபாய சமிக்ஞை ஒலி குறித்த நகரம் முழுவதும் எழுப்பப்பட்டதால் மக்கள் பாதுகாக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ‘மிக்கி ரோஸன்பெல்ட்’ தெரிவித்திருக்கின்றார்.
இப்பகுதியில் யூதர்கள் குறைவாகவே வசிப்பதாகக் கூறிய மிக்கி, இஸ்ரேலின் தலைநகரான் டெல் அவிவ் மற்றும் புராதன நகரமான ஜெருஸலம் பலத்த பாதுகாப்பிலும் விசேடமாக காஸாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதிலும் பாதுகாப்புப்படையினர் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்றுவரை இடம்பெற்ற இருநாள் கலவரத்தில் 24 பலஸ்தீனர்களும் 3 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலின் உக்கிரமான வான்தாக்குதலில் 150க்கும் அதிகமான பலஸ்தீன் பொதுமக்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.
இஸ்ரேலின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுள் பாலகர்களும் சிறுவர்களும் அடங்குவர். இதனால் ஐரோப்பிய மற்றும் ஆசிய பத்திரிகைகள் இச்சம்பவத்தை வண்மையாகக் கண்டித்து இன்று தலைப்பிட்டிருந்தன.
இதுவரைக்கும் அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு சமாதான நடவடிக்கைகளும் இடம்பெறாத நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த முன்வராதிருப்பதையும் குறித்த உலக பத்திரிகைகள் கோடிட்டுக் காட்டிருக்கின்றன.
![qassam-image07[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/qassam-image071.jpg?w=300&h=183)
Leave a comment