காத்தான்குடி மாணவியின் சாதனை..

டீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடி மட்/அல்-அமீன் மஹா வித்தயாலய மாணவி செல்வி J.பாத்திமா நஸீரா  தேசிய மட்ட மீலாத் போட்டியின்  பேச்சுப் பிரிவில் 03 ம்  இடத்தைப் பெற்றுள்ளார்.  அல்-அமீன் மஹா வித்தியாலயத்திற்கும் எமது ஊருக்கும் பெருமை தேடித்தந்த இம் மாணவிக்கு, ஆசிரியா்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறனா்.

அதற்கான பாடசாலை மட்டத்திலான விருதினை (16.11.2012 வெள்ளிக்கிழமை) இன்று அல்.ஹாஜ். MI. ABDUL GAFOOR BA (மதனி)  யினால் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

இந் நிகழ்வில் மட்/அல்-அமீன் மஹா வித்தியாலய அதிபர் MM.KALVUDEEN.BA/JP,  பிரதி அதிபர் SI.YASEER ARAFATH BBA/JP,   உப-அதிபா் MRS. FHM. SATHIQ  ஆகியோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

எமது ஊருக்கு பெருமை சேர்த்த மாணவி J பாத்திமா நஸீரா அவர்களுக்கு உங்கள் காத்தான்குடி சார்பாகவும் அதன் உள்ளுர் மற்றும் கடல் கடந்த வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

குறித்த மாணவியின் சாதனை எமது சாதனையாளர் பக்கத்திலும் (காத்தான்குடி சாதனையாளர்களில்), குறித்த பாடசாலையின் (பாடசாலைகள்) பக்கத்திலும் இடம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Published by

Leave a comment