சர்வதேச மைதானம் காத்தான்குடியில்….

    விசேட நிருபர்.

கிழக்கிலங்கையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் தற்போது காத்தான்குடியில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் புரணமைக்கப்பட்டு வருவதனை கானக் கூடியதாக உள்ளது. அதற்கான வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மைதானத்தில் புல் நடும் பணிகள் மேற் கொள்ளப்பட்ட வருகின்றது.  இதற்காக  சிங்கள சகோதரா்கள் வேலைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா்.

மேற்படி மைதானத்தின் அபிவிருத்திப் பணிக்கு போதிய இடவசதியின்மையால் கொளரவ பிரதியமைச்சா் MLAM.HIZBULLAH அவா்களுக்கும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் நிர்வாக சபைக்கும் இடையிலான போர்ச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்று, அதன் பலனாக ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லுாரிக்கு சொந்தமாக உள்ள வளவின் ஒரு குறிப்பிட்ட அளவினை மைதான அபிவிருத்திக்கென  கொடுப்பது  எனத்  தீர்மாணிக்கப் பட்டதாகவும் தெரிய வருகின்றது.

CIG பக்கமாகவுள்ள மைதான கதவினை சற்று மைதான உள் பக்கமாக அமைத்து, ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் வளவினுல் மைதான பக்கமாக செல்வதற்கும் புதிய  கதவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment