காஸா-இஸ்ரேல் மோதல்: 15 பலஸ்தீனியர்கள், 3 இஸ்ரேலியர்கள் பலி!

-MJ

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இதுவரைக்கும் 15 பலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களுள் ஹமாஸ் இயக்கத்தின் கொமாண்டர் அகமட் ஜபாரி என்பவரும் உள்ளடங்கியிருக்கின்றார்.

புதன்கிழமை காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய குடியேற்ற தொடர்மாடி ஒன்றில் விழுந்ததால் 3 இஸ்ரேலியர்கள் உடன் பலியாகி இருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்று காலை இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் காஸாவில் இடம்பெற்றன. இதில் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட மேற்படி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.

‘நாங்கள் மேற்கொண்டு எதனையும் செய்வோம்’ என இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகு கர்ஜித்திருக்கின்றார்.

இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை எகிப்தின் ஜனாதிபதி அகமட் முர்ஸி காஸாவிற்கு சமாதான விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment