கடற்கரை கால்பந்துப் போட்டி..

டீன் பைரூஸ்.

காத்தான்குடி உதைபந்தாட்ட வள நிலையம்  அணிக்கு  05 போ்  கொண்ட கடற்கரை கால் பந்து (BEACH FOOTBALL) சுற்றுப் போட்டி ஒன்றினை பல கழகங்களின் பங்கு பற்றுதலுடன் கடந்த ஒன்றரை மாதங்களாக காத்தான்குடி கடற்கரையில் நடாத்தி வந்தனா். மேற்படி சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 13.11.2012. செவ்வாய்க்கிழமை காத்தான்குடி கடற்கரை மணலில் இடம் பெற்றது. இறுதிப் போட்டிக்காக காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகமும் பாமுனை நெசனல் விளையாட்டுக் கழகமும் தெரிவாகி இரு கழகமும் பலப்பரீட்சை நடாத்தின.

இதில் காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகம் பெனால்ட்டி(தண்ட உதை) மூலம் வெற்றியினை தனதாக்கிக் கொண்டது.

வெற்றி பெற்ற கழகத்திற்கான வெற்றிக் கிண்ணத்தினை காத்தான்குடி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் ENG-M.NAWFAL/ES அவர்கள் வழங்கி வைத்தார்.

மேலும் காத்தான்குடி மத்தியஸ்தர்கள் சங்க மற்றும் காத்தான்குடி கிரசண்ட் வீரா்களும் ஒரு சினேக பூர்வ போட்டியில் கலந்து கொண்டனா்.

Published by

Leave a comment