‘ஆயிஷா பவுண்டேஷன் மாணவர் புலமைப்பரிசில் – 2012/2013’ வழங்கும் நிகழ்வு

ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பினால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் கடந்த 04/11/2012 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி மில்லத் மகளிர் மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

அமைப்பின் பொதுச் செயலாளர் CMM. சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களான காத்தான்குடி பிரதேச செயலாளர் SH.முஸம்மில் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பின் ஆலோசகரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரருமான ALM. சரீப் அவர்களுடன் ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இங்கு உரையாற்றிய பிரதம அதிதிகள் இப்புலமைப்பரிசில் வழங்குவதற்குக்  காரணமானவர்களான நன்கொடையாளர்களின் பெருந்தன்மையைப் பாராட்டியதுடன் இதில் மாணவர்கள் கவனமெடுத்து கல்வி கற்று முன்னேறுவதுடன் எதிர்காலத்தில் நீங்களும் இவ்வாறு உதவ முன்வர வேண்டும் என்றும் வெறும் சடத்துவக் கல்வியைவிட இஸ்லாமிய பூரண வாழ்க்கைத் தினுட்டம் பேணப்படக்கூடியவாறாக எமது கல்விக் கோட்பாடுகள் அமைய வேண்டும் எனவும் உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஏனையோரினால் ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பின் நோக்கம், அதன் புலமைப்பரிசில் மற்றும் பொது உதவித் திட்ட நடைமுறைகள், எதிர்காலத்தில் ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பினூடாக மாணவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள், மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன்.

இறுதியாக 2012/2013ம் ஆண்டிற்கான நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட 40  புலமைப்பரிசில்கள் 2012 மற்றும் 2013ம் ஆண்டு உயர்தர பரிட்சையில் தோற்றும் மாணவர்களுக்கும்  மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்  வழங்கப்பட்டன.

நன்றி

சீ.எம்.எம். சமீம்
பொதுச் செயலாளர்
ஆயிஷா பவுண்டேஷன்
காத்தான்குடி.

Published by

Leave a comment