இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை இன்று வெளியிட்டது.
இந்த 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால்- ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
ஜப்பான் அரசின் கோரிக்கையின் பேரில் வெளியிடப்பட்ட இந்த நாணயக்குற்றியின் முகப்பு பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டமும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![coin1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/coin11.jpg?w=300&h=298)
![coin2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/coin21.jpg?w=300&h=300)
Leave a comment