ஜனாதிபதியின் வழிகாட்டலில் கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, அல் அமீன் வித்தியாலயம், அல் நாஸர் வித்தியாலயம் ஆகிய தெரிவு பாடசாலைகளே இத்திட்டத்தின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
-தினகரன்
Leave a comment