புதிய காத்தான்குடி, விடுதி வீதி, 1ம் ஒழுங்கையில் வசித்து வந்த முகம்மது நயீம் முகம்மது சப்ரி என்பவா் 12.11.2012 திங்கக்கிழமை காலை 09.00 மணியளவில் கஹடகஸ்தெனியவில் உள்ள தனது பிடவைக் கடையில் துாக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.
மேலும் தெரிய வருவதாவது, அனுராதபுர மாவட்டத்திலுள்ள கஹடகஸ்தெனியவில் இவரும் இவருடைய சகோதரனான MN. SAMHAR என்பவரும் ஒரு பிடவைக் கடை ஒன்றினை நடாத்தி வந்துள்ளனா். இவருடைய தந்தையான முகம்மது நயீம் என்பவா் சில காலம் காத்தான்குடி பஸ் டிப்போவில் சாரதியாக கடமை செய்து விட்டு தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தற்போது வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் இவருடைய ஜனாஸா வைக்கப்பட்டிருக்கின்றது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment