மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி மறுப்பு!

ஹஜ்பெருநாள் தினத்தன்று அதிகாலை எரியூட்டப்பட்ட அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அநுராதபுரம் பிரதேச செயலகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

குறிபிட்ட பள்ளிவாசல் முஸ்லில் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. பள்ளி வாசல் அமைந்திருக்கும் காணி உறுதி பள்ளி வாசலுக்கு சொந்தமானதில்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இவ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுடன் தொடர்புடைய முஸ்லிம் குடும்பங்களும் ஏனைய இனத்தவரும் அவ்விடத்திலிருந்து இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வீரகேசரி

Published by

Leave a comment