‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை!

-MJ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திரைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டு, உலக முஸ்லிம்களின் எதிர்ப்பைப் பெற்று பின்னர் திரை இறக்கப்பட்ட ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ எனும் படத்தின் தயாரிப்பாளர் யூசுப் யிற்கு ஒருவருட சிறைத் தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

ஐம்பத்தி ஐந்து வயதான யூசுப் ஓர் கிறிஸ்தவர். எகிப்து நாட்டில் பிறந்து தற்பொழுது அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் வசித்து வருகின்றார்.

இத்திரைப்படம் இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பின், உலக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தான எதிர்ப்புகளுக்கு இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் உள்ளாகி இருந்தனர்.

இத்திரைப்படத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரபு உலகம், பாகிஸ்தான் என்பன வண்மையாக கண்டித்திருந்ததும் மரண தண்டனையை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஏனைய நாடுகளில் கலவரங்களும் வண்முறைகளும் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக லிப்யாவில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டதுடன் உலகில் 75க்கும் அதிகமான உயிராபத்து சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

1990 இல் இருந்து ‘கிரிமினல்’ புரிந்துவரும் யூசுப் இறுதியாக 2010ல் வங்கி மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டணையை தற்பொழுது விதித்திருக்கின்றது.

இதற்கிடையில் முஸ்லிம்களையும் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களையும் கேவலப்படுத்தி திட்டமிட்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தங்களை ஏமாற்றி நடிக்க வைத்திருந்ததாக யூசுப் மீது புகார் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment