க.பொ.த(உ.த)பெறுபேறுகள் ஜனவரி மாத இறுதியில்!

2012ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் என்.ஜே.புஷ்ப குமார தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் இரண்டாம் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது எதிர்வரும் இம்மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கூறினார்.

2012ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது. மூன்றாம் கட்டப் பணிகள் நவம்பர் 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் பெறுபேறுகளை ஜனவரி 31ஆம் திகதியளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment