மாமனிதரின் மரண அறிவித்தல்

நமது செய்தியாளர்.

பிரபல சமூக சேவையாளா், காத்தான்குடியின் வரலாற்றில் சரித்திரம் படைத்த  மாமனிதரும், மற்றும் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலின் ஆயுட்கால தலைருமான ஆலிம் அல்.ஹாஜ். ஏ.எம்.மீராசாஹிபு JP (ஆ.மா.ஹாஜியார்) அவா்கள் தனது 97 வது வயதில் (04.11.2012 ஞாயிறு) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.  அன்னாரின் ஜனாஸா  இன்று இஷா தொழுகையின் பின்னா்  காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் தொழுவிக்கப்பட்டு   அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.

அன்னார் எமது காத்தான்குடி சமூகத்துக்கு செய்த நற்சேவைகளை அல்லாஹ் அங்கீகரித்து  அவருக்கு ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்’ எனும் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயரடையும் அன்னாரது குடும்பத்தார்களுக்கும் எமது அனுதாபங்களை ‘உங்கள் காத்தான்குடி’ தெரிவித்துக் கொள்கின்றது.

Published by

Leave a comment