கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: ICC அங்கீகாரம்

நீண்ட காலமாக ஆலோசித்து வந்த கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங் களை கொண்டு வரும் தீர்மானத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. முக்கியமாக டெஸ்ட் போட்டிகளை பகலிரவுப் போட்டியாக நடத்துவது, நடுவரின் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்வது போன்ற தீர்மானங்களுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களும் பகல் போட்டியாக நடைபெறுவதால் அலுவலகம் செல்பவர்களும், பாடசாலை செல்லும் மாணவர்களும் போட்டிகளை ரசிப் பதற்கு வருவதில்லை. இவ்வாறான ரசிகர்களைக் கவருவதற்கே டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவாக நடத்தும் தீர்மானத்துக்கு ஐ.சி.சி. அங்கீகாரமளித்துள்ளது. இப்போது நடைபெற்று வரும் 20க்கு 20 போட்டிகளுக்கும், 50 ஓவர் கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின் றனர்.

இதற்கு முக்கிய காரணம் தங்கள் அலுவல்களை முடித்துவிட்டு வீடு வருபவர்கள் இரவு வேளையில் இலகுவாக இப்போட்டிகளை தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் ரசிக்க முடிவதால் அவ்வகை போட்டிகளின்பால் ரசிகர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவுப் போட்டிகளாக நடத்த அங்கீரித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இம்முடிவை அவுஸ்திரேலிய கிரிக் கெட்சபையும் வரவேற்றுள்ளது. இம்முடிவினால் சோபையிழந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் புத்துயிர் பெறும் என்றும் அச் சபை அறிவித்துள்ளது. ஆனால் முன்னாள் நியுசிலாந்து அணித் தலைவரும், பயிற்று விப்பாளருமான ஜோன் ரைட் இம்முடிவு குறித்து விசனம் தெரிவித்துள்ளார். பழைமை வாதியான அவர் டெஸ்ட் போட்டிகளில் புதுமைகளைப் புகுத்தி அதன் தரத்தைக் குறைக்க வேண்டாம் என்றும் அவர் ஆதங்கப்படுகிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் சபையும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இப்போட்டிகளால் டெஸ்ட் போட்டியின் விறுவிறுப்புக் குறையும் எனவும் இந்தியக் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய பிராந்திய அணிகள் மூன்று நாள் உள்ளூர்ப் போட்டிகளை பகலிரவுப் போட்டியாக நடத்தி இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த வாரம் தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நோபோல், பெளன்ஸர், பவர் பிளே விதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொதுவான மாற்றங்கள்

டி.ஆர்.எஸ். (டெஸ்ட் மற்றும் ஒருநாள்)

டி.ஆர்.எஸ். என அழைக்கப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் விதியின் எல். பி. டபிள்யூ. வழங்குவதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் மேற்முறையீட்டின்போது காலில் படும் (பாட்) பந்து தொழில் நுட்பத்தினூடே விக்கெட்டுக்கு மத்தியால் (பெயில்களுக்கு நடுவால்) செல்வதாக காண்பித்தால் அது ஆட்டமிழப்பாக கருதவும், அதற்கு வெளியில் செல்வதாக காண்பிக்கப்பட்டால் ஆட்டமிழப்பில்லை என்று முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோ போல் (மூன்று வகை போட்டிகள்)

பந்து வீச்சாளர் நோபோல் போட்டால் அது குறித்து மூன்றாவது நடுவரிடம் கேட்க களநடுவருக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, கள நடுவருக்கு அது பற்றித் தெரியாத விடத்து மூன்றாவது நடுவர் அறிவுறுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

பந்து வீச தாமதித்தல்

ஓவர்களை தாமதமாக போட்டு முடிப்பதற் காக களத்தடுப்பு அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று துடுப்பாட்ட அணி தாமதத்திற்கு காரணமாக இருந்தால் அதற்கும் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும். வர்ண பந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் விளையாட வேண்டும், போட்டியில் பயன் படுத்தப்படும் பந்தின் நிறம், வகை, தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை இரு நாட்டு கிரிக் கெட் சபைகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் பகல் போசன இடைவேளையான 40 நிமிடங்கள் மற்றும் தேநீர் இடைவேளையான 20 நிமிடங்களும் தற்போது போன்றே கடைப்பிடிக்கப்படும். ஆனால் போட்டியை நடத்தும் அணி அடுத்த அணியின் அனுமதியுடன் இரு இடைவேளைகளையும் 30 நிமிடங்களாக மாற்ற ஐ.சி.சிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு பவர் பிளே முறைகள் கடைப்பிடிக்கப்படவுள் ளன. முதலாவது பவர் பிளே முதல் 10 ஓவர் களிலும் கடைப்பிடிக்கப்படும். இதன்போது இரு களத்தடுப்பாளர்களே 30 யார் வட்டத்திற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும். பின்னர் துடுப்பாட்ட அணியால் இரண்டாவது பவர் பிளே பெறப்படும். அது 5 ஓவர்கள் கொண்டதாகவும் 40 ஆவது ஓவருக்கு முன்ன தாகவும் பெற வேண்டும். இந்த பவர்பிளே ஓவரின் போது மூன்று வீரர்களுக்கே 30 யார் வட்டத்திற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும். அத்துடன் பவர் பிளே ஒவர்கள் இல்லாத ஓவர்களின் போது 30 யார் வட்டத் திற்கு வெளியில் அதிக பட்சம் 4 வீரர்களு க்கு களத்தடுப்பில் ஈடுபட முடியும். முன்னர் இது 5 வீரர்களாக இருந்தது.

ஐ.சி.சி. விதி 42.6 (ஏ) இன் கீழ் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக பட்சமாக ஓவர் ஒன்றில் இரு பெளன்ஸர் பந்துகளை வீச அனுமதிக்கப்பட்டுள்ளது.

* இருபது – 20 போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களிலும் களத்தடுப்பில் ஈடுபடும் அணி ஏதாவது ஒரு ஓவரை தமக்கு விருப்பமான பக்கத்தில் இருந்து வீசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

* போட்டிக்கான மாற்று வீரர் ஒருவரை ஒவ்வொரு அணியும் பரிந்துரைக்க வேண்டும். இதில் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் காயம், சுகவீனம் அல்லது ஏற்றுக் கொள்ளும் படியான காரணத்திற்காக விலகிக்கொள்ளும் பட்சத்தில் மாற்று வீரரை பயன்படுத்த முடியும்.

-தினகரன்

Published by

Leave a comment