விசேட செய்தியாளா்.
அல்லாஹ்வின் உதவியோடு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்-காத்தான்குடி இஸ்லாமிய வழி காட்டல் நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளின் நிதி உதவியுடன் காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள ஆ-ம -ஹாஜியார் காணியின் ஒரு துண்டினை பல இலட்சம் ரூபா கொடுத்து கொள்முதல் செய்யப் பட்டு தாருல் அர்கம் இஸ்லாமிய அறிவு ஊட்டல் மையம் ஒன்று பல இலட்சம் ரூபா செலவில்கட்டப் பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
மிகப் பெரிய நோக்குடன் கட்டப்பட்டு வரும் இந்த இஸ்லாமிய அறிவு ஊட்டல் மையம் புதிதாக இஸ்லாத்தினுல் வருபவா்களுக்கான எல்லா வகையான அறிவு ஊட்டல் உட்பட தொழுகை போன்ற பயிற்சிகளும் வழங்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இவ்வாறான மையங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்ற நிலையில் காத்தான்குடியில் இது அமைய இருப்பது மிகப் பெரும் பாக்கியமாகும்.

Leave a comment