-MJ
மடவளை பஸார், திக்கின்ன பிரதேசத்தில் சற்றுமுன் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயதுடைய தாயும் அவரது 20 வயதுடைய திருமணமான மகளும் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் வீட்டில் பிரதான மின்சார இணைப்புக்கு அருகில் துணி காயப்போடும் கொடி (கம்பியினால் ஆனது) மின்சார கம்பியுடன் பட்டு மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாத இர்பான் அவர்களின் மாமியார் இன்று (வியாழன்) காலை துணி காயப்போடும் போது மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது இவரை காப்பாற்ற முனைந்த இர்பான் அவர்களின் மனைவியும் அவரின் சகோதரியின் 7 வயது பிள்ளையும் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உடனடியாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களின் ஜனாஸா தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment